
சென்னை: தொழிலாளர்களுக்காக உழைக்கின்ற, பாடுபடுகின்ற இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு தொழிலாளர் தோழர்கள் பக்கபலமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, மே தினப் பூங்காவில் நடைபெற்ற மே தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “உருண்டோடுகின்ற ரயிலை ஓட்டக்கூடியவர் ஒரு தொழிலாளி தான்! இழையை நூற்று நல்லாடை நெய்பவன் யார் என்று கேட்டால் அவரும் தொழிலாளி தான்! இரும்பு காய்ச்சி உருக்குபவன் யார் என்று கேட்டால் அவரும் தொழிலாளி தான்! மிராசுதாரர்கள் மேனாமினுக்கி வாழ்க்கைக்கான பொருள்களை உருவாக்கித் தரக்கூடியவர்கள் தொழிலாளியாக தான் இருக்கிறார்கள்.