
’கங்குவா’ படத்தின் தோல்விக்குப் பிறகு சூர்யாவுக்கு ஒரு கட்டாய வெற்றி தேவைப்பட்டது. ‘கனிமா’ பாடல் சமூக வலைதளங்களில் பெற்ற மாபெரும் வரவேற்பு, ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படம் என்ற ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ளது ‘ரெட்ரோ’.
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலைக்கு ஆளாகும் பாரிவேல் கண்ணனை (சூர்யா) தத்தெடுத்து வளர்க்கின்றனர் திலகன் (ஜோஜு ஜார்ஜ்) – சந்தியா (ஸ்வாசிகா) தம்பதி. பாரி மீது வெறுப்புடனே இருக்கும் திலகன், எதிரிகளிடமிருந்து தன் வளர்ப்பு மகன் தன்னை காப்பாற்றிய தருணத்தில் அவரை தன் மகனாக ஏற்றுக் கொள்கிறார்.