
சென்னை: பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்.29 முதல் மே 5 வரை கொண்டாடப்படும் தமிழ் வாரத்தையொட்டி, “தமிழ் வெல்லும்” என்னும் தலைப்பில் நடத்தப்படவுள்ள பல்வேறு போட்டிகள் மற்றும் அதற்கான விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சட்டப் பேரவையில் விதி- 110ன் கீழ் தமிழக முதல்வர், ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 5ம் தேதி வரை தமிழ் வாரம் கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார். அதனையொட்டி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் வாயிலாக “தமிழ் வெல்லும்” என்னும் தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. போட்டிகள் அதன் விதிமுறைகளும் பின்வருமாறு: