
சென்னை: சிறு, குறு விவசாயிகளுக்கு தாராளமாக கடன் வழங்க அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகள் முன்வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி வடிவேல், தனியார் வங்கியில் பெற்ற கடனுக்கான தவணையை திரும்பச் செலுத்த 20 நாள்கள் தாமதமானதற்காக வங்கி ஊழியர்கள் திட்டியதால், மனம் உடைந்து நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. விவசாயி வடிவேலுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.