
சென்னை: சென்னையில் முறையான வழிகாட்டுதல்களை பின்பற்றாத கட்டிடங்களுக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், போப் பிரான்சிஸ் மறைவுக்கும், காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 சுற்றுலா பயணிகளுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.