தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரிக்கும் பாஜக மாநில தலைவர் மாற்றம் குறித்த பேச்சு அடிபட ஆரம்பித்திருப்பதால் பலரும் டெல்லிக்கு படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். புதுச்​சேரி மாநில பாஜக தலை​வ​ராக சாமி​நாதன் தொடர்ச்​சி​யாக 8 ஆண்டுகள் பொறுப்​பில் இருந்​தார். இவர் தலை​வ​ராக இருந்த போது​தான் 2021-ல் பாஜக – என்​.ஆர்​.​ காங்​கிரஸ் கூட்​டணி புதுச்​சேரியில் ஆட்​சி​யைப் பிடித்​தது. அந்​தத் தேர்​தலில் 6 இடங்​களில் வென்ற பாஜக, முதல் முறை​யாக அமைச்​சர​வை​யிலும் இடம்​பிடித்தது.

இந்த நிலை​யில், 2023-ல் புதுச்​சேரி மாநில பாஜக தலை​வ​ராக மாநிலங்​களவை உறுப்​பினர் செல்​வகணப​தியை நியமித்​தது பாஜக தலை​மை. இவரது தலை​மை​யில் 2024 மக்​கள​வைத் தேர்​தலை சந்​தித்த பாஜக – என்​.ஆர். காங்​கிரஸ் கூட்​டணி காங்​கிரஸிடம் தோற்​றுப் போனது. ஆளும் கூட்​ட​ணி​யில் இருந்​தும் தொகு​தியை தவற​விட்​டது பாஜக-வுக்கு பெரும் பின்​னடை​வாகக் கருதப்​பட்​டது. இதையடுத்து மாநிலத்​தில் கட்​சி​யின் வளர்ச்​சி​யும் மந்த நிலைக்​குப் போனது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *