இங்கிலாந்தைச் சேர்ந்க காண்டன்ட் கிரேயேட்டர் ரால்ஃப் லெங். இவரின் குழந்தைப்பருவம் இந்தியாவில் கழிந்திருக்கிறது. அதற்குப் பிறகு சில காரணங்களால் அவர் தன் குடும்பத்துடன் மீண்டும் இங்கிலாந்து சென்றுவிட்டார்.

தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் அவர், சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் தன் குழந்தைப் பருவத்தை கழித்த இந்திய வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

இது தொடர்பாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில், ‘என் சிறுவயதில் வசித்த இடத்துக்குப் போகப்போகிறோம்’ என தன் பார்வையாளர்களை அவரின் மனநிலைக்குக் கொண்டுவருகிறார்.

அதன்பிறகு அவரின் பயணம் தொடர்கிறது. இறுதியில் அவர் வசித்த அந்த வீட்டை கண்டடைகிறர். அந்த வீட்டின் கதவைத் தட்டி அனுமதிப்பெற்று உள்ளே செல்கிறார். உள்ளே சென்ற சில வினாடிகளில் எல்லாமே மாறிவிட்டது.

எனக் கண்கலங்குகிறார். மேலும், அவர் சிறுவயதில் அங்கு விளையாடிய வீடியோ காட்சிகளையும் பதிவிட்டு தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார். தற்போது அந்த வீடியோ மில்லியன் கணக்கான வீவ்ஸ் கடந்து வைரலாகி வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *