
பெங்களூரு: கர்நாடகாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பிய நபர் அடித்து கொல்லப்பட்ட நிலையில், அம்மாநில முதல்வர் சித்தராமையா, 'பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிடுவது தேச துரோகம்' என தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின்போது 30 வயதான நபர் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என முழக்கம் எழுப்பியதாக கூறப்படுகிறது. அவரை 20க்கும் மேற்பட்டோர் கும்பலாக தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, இதுவரை 20 பேரை கைது செய்துள்ளனர்.