
சென்னை: பாதுகாப்புக் குழுவினரின் வாகனங்களில் ஏறுவது, குதிப்பது, பயணத்தின்போது இருசக்கர வாகனங்களில் தலைக்கவசமின்றி வேகமாக பின் தொடர்வது போன்ற செயல்களில் தொண்டர்கள் ஈடுபடக் கூடாது என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: கோவையில் நடைபெற்ற கட்சியின் பூத் கமிட்டி முகவர் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த என்னை அன்பால் நனைய வைத்தீர்கள். உண்மையான மக்களாட்சியையும் உண்மையான ஜனநாயக அதிகாரத்தையும் மீட்டுத் தருவதுதான் எனது அன்புக் காணிக்கையாக இருக்கும். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியால் இதை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம்.