ஏப்ரல் 26 முதல் (வாக்கியப் பஞ்சாங்கப்படி) உங்கள் ராசியிலேயே அமர்கிறார் ராகு பகவான். கேது பகவான், உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் நின்று பலன் தருகிறார். வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் அன்பர்களுக்கு நல்ல சேதி வந்து சேரும்.

ராகு பகவான் தரும் பலன்கள்

1. ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்கிறார். ஓரளவு பிரச்னைகள் குறையும். இடம், பொருள் ஏவல் அறிந்து பேசும் வித்தையை கற்றுக்கொள்வீர்கள். சிலர், இடவசதியான வீட்டிற்கு மாறுவீர்கள். வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் அன்பர்களுக்கு நல்ல சேதி வந்து சேரும்.

2. சில நேரங்களில் வீட்டில் தாயா, தாரமா என்ற தடுமாற்றம் வரும். ஷேர் பணம் தரும். போட்டிகளில் ஜெயிப்பீர்கள். சிக்கலான தருணங்களைச் சந்திக்கும்போதும், சமயோஜித புத்தியுடன் நடந்துகொள்வீர்கள்.

3. செலவுகளை இனி கட்டுப் படுத்துவீர்கள். அதேநேரம் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவேண்டும். இந்தக் காலகட்டத்தில் சின்னச் சின்ன வேலைகளும் சிக்கலாகி முடியும். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை.

கும்பம்

4. ராசியில் நிற்கும் ராகு சலிப்பையும், அலட்சியப்போக்கையும் உண்டாக்குவார். வெளி உணவுகளை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. நேரம் கடந்து சாப்பிட வேண்டாம். எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்துப் போடவேண்டாம்.

5. வியாபாரிகளே! அகலக்கால் வைக்க வேண்டாம். முக்கிய வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. உத்தி யோகஸ்தர்களே! தடைப்பட்ட சலுகைகள் உடனே கிடைக்கும். கலைத்துறையினரின் படைப்புகளுக்குப் பாராட்டு கிடைக்கும்.

கேது பகவான் தரும் பலன்கள்

6. கேது, ராசிக்கு ஏழாவது வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். பிரச்னைகளை நேருக்குநேராக எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். பலரையும் நம்பி ஏமாந்த நிலை மாறும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருக்கும் பிரபலங்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். நவீன வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களிடையே நிலவி வந்த மனஸ்தாபங்கள் விலகும்.  

7. சொத்துப் பிரச்னை, பங்காளிச் சண்டைக்காக நீதிமன்றம் செல்ல வேண்டாம். இயன்றவரையிலும் பேசித் தீர்க்கப் பாருங்கள். அரசுக் காரியங்களில் கவனமாக இருங்கள். குடும்ப விஷயங்களை வெளியே யாரிடமும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம்.

கும்பம்

8. தொழிலில், மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் கருத்துவேறுபாடுகள் மாறும். உங்களின் நிர்வாகத் திறன் கூடும்.

9. வீட்டில் அனுதினமும் விளக்கேற்றி வைத்து துர்கா ஸ்தோத்திரம் படித்து வழிபடுங்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு கால வேளையில், ராகு பகவானுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள். இயன்றால் பிள்ளையார்பட்டி விநாயகரை தரிசித்து வழிபட்டு வாருங்கள்; இன்னல்கள் நீங்கும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *