
சென்னை: டெல்லியில் முகாமிட்டுள்ள நயினார் நாகேந்திரன் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோருடன் சந்தித்து பேசினார். இதில் சட்டப்பேரவை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் மே 2-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் 3-ம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவும் தமிழகம் வருகின்றனர்.
தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவும் இணைந்தது. இதன் தொடர்ச்சியாக தமிழக பாஜக தலைவராக அக்கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த 12-ம் தேதி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றபின் டெல்லி சென்றுள்ள நயினார் நாகேந்திரன், அங்கு முகாமிட்டு தலைமை நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.