
சென்னை: பாவேந்தர் பாரதிதாசன் 135-வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது புகைப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பாவேந்தர் பாரதிதாசன் 135-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஏப்.29-ம் தேதிமுதல் மே 5-ம் தேதி வரை தமிழ் வளர்ச்சி வாரமாக கொண்டாடப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.