• April 30, 2025
  • NewsEditor
  • 0

’’ ‘டாக்டர் எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துச்சு. இப்போ நான் நல்லா தான் இருக்கேன். ஆனா, இனிமே நான் தாம்பத்திய உறவே வெச்சுக்க முடியாதா’ என்றவருக்கு, 50 வயதுக்குள்தான் இருக்கும்’’ என்கிற சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், இதயநோய் பாதிப்பு உள்ளவர்கள், மாரடைப்பு வந்தவர்கள், இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் உறவுகொள்ளும் முன்பு கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி பகிர்ந்துகொண்டார்.

மாரடைப்பு

‘’நீங்கள் எந்த வயதில் இருந்தாலும், ஒருமுறை மாரடைப்பு வந்துவிட்டது என்றால், அதன்பிறகு தாம்பத்திய உறவு கொள்ளவே கூடாது என்று அர்த்தமில்லை. தாராளமாக உறவு கொள்ளலாம். ஆனால், மனைவியுடன் மட்டுமே… சூழலோ, விருப்பமோ மற்றொரு பெண்ணுடன் உறவுகொள்ள நேரிட்டால், அது தரும் மனப்பதற்றம் இதயத் துடிப்பை அதிகரிக்க வைத்து மறுபடியும் மாரடைப்பை வரவழைக்கலாம்.

இதேபோல், சொந்த வீட்டில் அல்லது பழகிய இடத்தில் மட்டும் உறவுகொள்வது நல்லது. புது இடத்தில் உறவுகொள்ளும்போதும் இதயத்துடிப்பு அதிகமாகி மீண்டும் மாரடைப்பு வரலாம்.

செக்ஸ்
செக்ஸ்

செக்ஸில் ஃபேண்டஸி வேண்டும் என்று விநோதமான பொசிஷனில் உறவுகொள்வது, வேகவேகமாக உறவுகொள்வது போன்றவற்றை முற்றிலும் தவிர்த்திடுங்கள். வசதியான நிலையில் இருந்தபடி செக்ஸ் செய்யுங்கள்.

பொதுவாகவே, உறவுகொள்ளும்போது சிலருக்கு இதயத்துடிப்பு அதிகமாகும். இதனால், சிலருக்கு அரிதாக மாரடைப்பும் வரலாம். அதனால், ஏற்கெனவே மாரடைப்பு வந்தவர்கள் உறவுகொள்ளும்போது சார்பிட்ரேட் (Sorbitrate) என்ற மாத்திரையை தலையணைக்கு அடியில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஒருவேளை இதயம் படபடப்பது, மூச்சுவாங்குவது, மார்பில் வலி உண்டாவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக உறவை நிறுத்திவிட்டு, சார்பிட்ரேட் மாத்திரையை நாக்குக்கு அடியில் வைத்துக்கொள்ளுங்கள். உடனே மருத்துவ உதவியையும் நாடுங்கள்.

காமராஜ்

மாரடைப்பு வந்தவர்களும், இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களும் அது நடந்து குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்கு செக்ஸில் ஈடுபடக்கூடாது. அதன்பிறகும், மருத்துவரின் ஆலோசனையைக் கேட்ட பிறகே உறவில் ஈடுபட வேண்டும்’’ என்கிறார் டாக்டர் காமராஜ்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *