
மும்பை பேலாப்பூரில் கடந்த வாரம் பில்டர் குருநாத் என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது மகன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள போதைப்பொருள் வழக்கிற்காக தன்னை போலீஸார் அடிக்கடி விசாரணைக்கு அழைத்துச் சித்ரவதை செய்வதாக குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து போதைப்பொருள் தொடர்பாக நவிமும்பை போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
இதில் நவிமும்பை நெரூல் பகுதியில் வீட்டு மாடியில் போதைப்பொருள் பரிவர்த்தனை நடக்க இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு ரெய்டு நடத்தி கஞ்சாவைப் பறிமுதல் செய்ததோடு அக்கட்டிட உரிமையாளர் ஆசிஷ் மற்றும் அகமத் ஆகிய இரண்டு பேரை மட்டும் கைது செய்தனர்.
ஆனால் ஆகாஷ் என்பவர் தப்பித்துவிட்டார். அவர்களிடம் விசாரித்த கஞ்சாவை ஹாக்கி வீரர் சுஜித் மற்றும் போதைப்பொருள் வியாபாரி சாஹில் ஆகியோரிடமிருந்து வாங்கியதாக தெரிவித்தனர்.
இதையடுத்து நெரூல் பகுதியில் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர். சுஜித் இந்திய ஹாக்கி அணிக்காக விளையாடி இருக்கிறார். சுஜித்தும், சாஹிலும் ஹைட்ரோபோனிக் முறையில் தாய்லாந்தில் வளர்க்கப்பட்ட கஞ்சாவை, விமானத்தின் மூலம் கடத்தி வந்தது தெரிய வந்தது.
கஞ்சா மும்பை விமான நிலையத்திற்கு வந்ததும் கஸ்டம்ஸ் ஏஜெண்ட் கமால் என்பவர் சுங்க அதிகாரி பிரசாந்த் கவுர் என்பவர் துணையோடு விமான நிலையில் இருந்து வெளியில் கொண்டு வந்ததாக நவிமும்பை குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் அமித் காலே தெரிவித்தார்.
கமால் மற்றும் பிரசாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொண்டு விசாரித்தபோது நவிமும்பை போலீஸ் சந்தீப் மற்றும் சஞ்சய் ஆகியோர் கஸ்டம்ஸ் ஏஜெண்ட் கமாலுடன் தொடர்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
சுஜித்தும், கமாலும் போதைப்பொருளை விற்பனை செய்து பணத்தை கூரியர் மூலம் தாய்லாந்துக்கு அனுப்பியதும், அங்குப் பணம் கிரிப்டோகரன்சியாக மாற்றப்பட்டதாகப் போதைப்பொருள் தடுப்புபிரிவு இன்ஸ்பெக்டர் சந்தீப் நிகாடே தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கடந்த மார்ச் மாதம் 1000 கோடி மதிப்பு போதைப்பொருள் பிடிபட்ட வழக்கில் தேடப்படும் நவீன் என்பவர் தாய்லாந்து அல்லது மலேசியாவில் இருந்து கொண்டு போதைப்பொருள் வியாபாரம் செய்து வருவதாகவும், அவனைப் பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதே போன்று நவிமும்பை கார்கர் பகுதியில் போலீஸார் ரெய்டு நடத்தி ஆப்பிரிக்கப் பிரஜைகள் போதைப்பொருள் பரிவர்த்தனை செய்யும் இடத்தில் 10க்கும் மேற்பட்ட நைஜீரிய பிரஜைகளைக் கைது செய்து அவர்களிடமிருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான அனைவரும் விசா முடிவடைந்தவர்கள் ஆவர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs