
சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து முடிந்த நிலையில், அவை நடவடிக்கைகள் குறித்தும், திமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டும், கட்சியில் யாரேனும் நாகரிகத்தின் எல்லையைக் கடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை சுட்டிக்காட்டியும் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தின் விவரம் வருமாறு: தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு நம் பாதையில் தடைக்கற்களை அள்ளி அள்ளிப் போட்டாலும், அதனை எதிர்கொள்ளும் வலிமையுடன் திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம் மக்கள் நலன் காக்கும் சாதனைத் திட்டங்களுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது.