
விமானம் கிளம்ப முடியாமல் தடுமாறுகிறது… மருத்துவமனையில் நோயாளிகள் தவிக்கின்றனர்… எலெக்ட்ரிக் ரயில்கள் ஒரு அடி கூட நகராமல் திணறுகின்றன…
இது கடந்த திங்கட்கிழமை ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில் நடந்துகொண்டிருந்த அசல் காட்சி.
பெரும்பாலான ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நகரங்களில் மின்சாரத் தடை. ‘அது என்ன காரணம்?’ என்று அதிகாரிகள் உட்பட யாருக்கும் ஒன்றும் புரியவில்லை… விளங்கவில்லை.
மக்கள் அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
இது நீடித்தது ஏதோ ஓரிரு நிமிடங்களுக்கு அல்ல… ஒரு நாள் முழுவதும்!
என்ன ஆச்சரியமாக உள்ளதா?
இந்தப் பாதிப்பால் மொபைல் நெட்வொர்க் முதல் டிராபிக் லைட் வரை அனைத்தும் ஸ்தம்பித்த விட்டது.
மருத்துவமனைகளில் அவசர அவசரமாக ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டன. இந்த நிலை தொடர்ந்தால் என்ன செய்வது என்று மக்கள் மளிகைப் பொருட்கள் உள்படத் தேவையானவற்றை வாங்கக் கடைகளுக்கு முன்னால் வரிசை கட்டினர்.
மெட்ரோக்கள் நடுவழியின் நின்று, மக்கள் வெளியேற முடியாத மாதிரி ஆகிவிட்டது.
இந்த மின்சாரத் தடையை ‘அவசர நிலை’யாக அறிவித்துள்ளது ஸ்பெயின் அரசு. இதை ஐரோப்பாவின் மிகப்பெரிய மின் தோல்வி எனவும் ஸ்பெயின் அரசு கூறியுள்ளது.
இந்த மின்சாரத் தடை ஆரம்பத்தில் ‘இது மிகப்பெரிய சைபர் தாக்குதல்’ என்று கூறப்பட்டது. ஆனால் அது அரசு அதிகாரிகளால் முற்றிலும் மறுக்கப்பட்டு விட்டது.
போர்ச்சுகல் பிரதமர் லூயிஸ் மாண்டினீக்ரோ, “இது முதன்முதலாக ஸ்பெயினில்தான் தொடங்கியது” என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து போர்ச்சுகல் மின் நிலையமோ, “இது ஒரு அரிய வளிமண்டல நிகழ்வு” என்று கூறியுள்ளது.
ஆனால், இந்த நிலைக்கான காரணத்தை ஸ்பெயின் அரசு எதுவுமே கூறவில்லை.
ஆனால், இப்போது இரண்டு நாடுகளிலுமே நிலைமை சரி செய்தாகி விட்டது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs