
Tesla நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், இந்தியச் சந்தையில் தங்கள் நிறுவனத்தின் காரை விற்பனைக்குக் கொண்டுவரப் பலவிதமான முயற்சிகளையும், பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
இவ்வாறிருக்கும்போது, சூரத் தெருக்களில் டெஸ்லா சைபர் ட்ரக் காருடன் வலம் வந்துகொண்டிருக்கிறார் சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் கூற்றின்படி, குஜராத்தில் பேசுபொருளாக இருந்துவரும் இந்த சைபர் ட்ரக் காரானது துபாயிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
சூரத்தைச் சேர்ந்த லாவ்ஜி டாலியா என்ற தொழிலதிபர் இதை வாங்கியுள்ளார். இது 2025-ம் ஆண்டில் லிமிடெட் எடிஷனாக டெஸ்லா வெளியிட்ட ஃபவுண்டேஷன் சீரிஸ் சைபர் ட்ரக் ஆகும்.
இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் டாலியாவின் மகன் பியூஷ், “நாங்கள் ஆன்லைனில் தேடியவரையில், இதுதான் இந்தியாவில் உள்ள ஒரே ஒரு சைபர் ட்ரக். இதுபோன்ற கார் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டதே இல்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும், “நாங்கள் பல நாள்களுக்கு முன்பு டெக்ஸாஸில் உள்ள டெஸ்லா தலைமையகத்தில் இந்தக் காரை புக் செய்தோம். இப்போது சில நாள்களுக்கு முன்புதான் டெலிவரி செய்யப்பட்டது” என்றும் பேசியுள்ளார்.

இந்த காரின் விலை மற்றும் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் செலவுகள் பற்றிய உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
இருப்பினும் சில அறிக்கைகளில், இறக்குமதிக்குப் பிறகான செலவு ரூ. 60 லட்சம் எனக் குறிப்பிடப்படுகிறது.
யார் இந்த லாவ்ஜி டாலியா?
சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் லாவ்ஜி டாலியா, நகரின் முக்கிய ரியல் எஸ்டேட் புள்ளி, வைர வியாபாரி, பவர் லூம் உரிமையாளர்.

சூரத்தின் உள்ளூர் மக்களுக்கு அதிக நன்கொடைகள் வழங்கியதால் அப்பகுதியில் பாட்ஷா என அழைக்கப்படுகிறார்.
ரியல் எஸ்டேட் தொழிலுடன், கோபின் டெவலப்பர்ஸ், கோபின் அறக்கட்டளை (என்.ஜி.ஓ) மற்றும் முதலீட்டு நிறுவனமான கோபின் வென்ச்சர்ஸ் எனப் பல தொழில்கள் செய்துவரும் இவரது நிறுவனத்துக்கு கோபின் குழுமம் என்று பெயர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb