• April 30, 2025
  • NewsEditor
  • 0

வரவிருக்கும் பிரதான மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்படும் என இன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

“அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று, மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு சேர்க்கப்பட வேண்டும் என முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்தார் அஷ்வினி வைஷ்ணவ்.

மேலும் அவர், 2010ம் ஆண்டு, அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங், ‘சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் அமைச்சரவையில் பரிசீலிக்கப்பட வேண்டும் எனக் கூறியதாகவும், காங்கிரஸ் கட்சி சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்ததாகவும் குற்றம்சாட்டினார்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு

“காங்கிரஸ் கட்சி எப்போதுமே சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக இருந்துள்ளது. இப்போது சில மாநில அரசுகள் அரசியல் நலனுக்காகச் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்கின்றன, அவை வெளிப்படையாக நடத்தப்படவில்லை.” என்றும் கூறினார்.

காங்கிரஸ் தலைமையிலான தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியதைச் சுட்டிக்காட்டுவதாக அவரது பேச்சு அமைந்திருந்தது.

“காங்கிரஸும் அவர்களது ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பை ஒரு அரசியல் கருவியாக மட்டுமே பயன்படுத்தினர் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

சில மாநிலங்கள் சிறப்பாகக் கணக்கெடுப்பு நடத்தியிருந்தாலும் வேறு சில மாநிலங்கள் அரசியல் கோணத்தில் வெளிப்படையற்ற முறையில் நடத்தின. அதுபோன்ற கணக்கெடுப்புகள் சமூகத்தில் கேள்விகளை எழுப்பியுள்ளன.

நமது சமூக கட்டமைப்பு அரசியலால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகச் சாதிவாரி கணக்கெடுப்பு மக்கள்தொகை கணக்கெடுப்பில் நடத்தப்பட வேண்டும். சர்வேயாக அல்ல!” என்றும் அவர் பேசியுள்ளார்.

மேலும், “இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 246 -ன் படி, மக்கள்தொகை கணக்கெடுப்பு ஏழாவது அட்டவணையின் 69வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன்படி இந்த விவகாரம் ஒன்றிய அரசினுடையது.

சில மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியிருந்தாலும் அதன் அணுகுமுறை கணிசமாக மாறுபடுகிறது” என்று பேசினார் அஷ்வினி வைஷ்ணவ்.

“சாதிவாரி கணக்கெடுப்பு துண்டு துண்டாக மாநில அளவிலான ஆய்வுகளாக அல்லாமல் மக்கள்தொகை கணக்கெடுப்பில் எடுக்கப்படுவதுதான் சிறந்தது.

இது நாட்டின் சமூக, பொருளாதார அடித்தளங்களை வலிமைப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டது. நாட்டின் வளர்ச்சிப்பாதை தொடரும்” எனக் கூறியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *