
ஐபிஎல் பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பில் நீடிப்பதற்கான முக்கியமான போட்டியில் நேற்று டெல்லியை எதிர்கொண்டது கொல்கத்தா.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, பவர்பிளேயில் நன்றாக வேகமெடுத்து, பின்னர் மிடில் ஓவர்களில் ஸ்லோடவுன் ஆகி ஒரு வழியாக 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது.
அடுத்து களமிறங்கிய டெல்லி, ஓப்பனிங்கில் தடுமாறினாலும் நடுவில் அக்சர் – டு பிளெஸ்ஸிஸ் கூட்டணி, 13 ஓவர்கள் வரை ஆட்டத்தைத் தங்கள் பக்கம் வைத்திருந்தது.
அந்த நேரத்தில் கொல்கத்தாவின் ஆன்ஃபீல்டு கேப்டனாகச் செயல்பட்ட சுனில் நரைன் எடுத்த மாஸ்டர் மூவ்களால் கொல்கத்தா 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் பேட்டிங் (27 ரன்கள்), பவுலிங் (3 விக்கெட்டுகள்), ஃபீல்டிங் (கே.எல். ராகுல் ரன் அவுட்), கேப்டன்சி (வருண் சக்ரவர்த்தி 18-வது ஓவர் கொடுத்தது) என அனைத்திலும் கலக்கிய நரைனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
போட்டிக்குப் பின்னர் பேசிய நரைன், “முழுக்க முழுக்க இது அணியின் முயற்சி. அணிக்காக இன்னும் பங்களிப்பு வழங்குவேன் .
நன்றாக ஸ்டார்ட் செய்து தடுமாறிய போட்டிகளும், நல்ல ஸ்டார்ட் இல்லாமல் இறுதியில் நன்றாக முடித்த ஆட்டங்களும் நிறைய இருக்கின்றன. இப்போட்டியில் நான் எடுத்த அனைத்து விக்கெட்டுகளையும் என்ஜாய் பண்ணினேன்.

நான் சிறந்த ஃபீல்டர் இல்லை. ஆனால், நம்மால் முடிகின்ற நேரத்தில் நல்ல ரன் அவுட்களை எடுப்பது எப்போதும் நல்லது. ஜஸ்ட் பந்தை எடுத்து முடிந்த அளவுக்கு வேகமாக த்ரோ செய்ய வேண்டும்.
எப்போதும் அழுத்தமான நேரங்களில், கேப்டன் தேர்வு செய்யும் வீரராக இருக்க விரும்புகிறேன். அத்தகைய வீரராகப் பயிற்சிகள் இல்லாதபோதும் கடினமாக உழைக்க வேண்டும்” என்று கூறினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் 12-வது ஓவரில் கேப்டன் ரஹானே ஃபீல்டிங்கில் காயமடைந்து வெளியேறிய பிறகு, ஆன்பீல்டு கேப்டனாக நரைன் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…