
சென்னை: தொழிலாளர் வர்க்கம் ஓரணியில் நின்று போராட உறுதி ஏற்போம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருடத்தின் 365 நாள்களில் ஒரு சில நாள்களே உலகம் முழுமையும் கொண்டாடப்படுகின்ற உன்னதமான நாள்கள் ஆகும். அத்தகைய திருநாள்களில் ஒன்றுதான் ‘மே’ திங்கள் முதல் நாள். ‘தொழிலாளர்களின் உழைப்பே உலகத்தின் மூலதனம்’ என்ற உண்மையை பாட்டாளி வர்க்கம் ரத்தம் சிந்திப் பிரகடனம் செய்த நாள்தான் மே முதல் நாள் ஆகும்.