
பத்ம விருது தனக்கு இப்போது கிடைத்திருப்பதுவே சரியான தருணம் என்று பாலகிருஷ்ணா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகரும், அரசியல்வாதியுமான பாலகிருஷ்ணாவுக்கு டெல்லியில் ஏப்ரல் 28-ம் தேதி பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
பத்ம பூஷண் விருது வென்றிருப்பது குறித்து பாலகிருஷ்ணா, “எனது ரசிகர்களுக்கும் இந்திய அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்தில் ஒரு நடிகராக 50 ஆண்டுகளை நிறைவு செய்தேன். இந்துபூர் தொகுதியில் இருந்து 3 முறை எம்.எல்.ஏ ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். எனது பசவதாரகம் மருத்துவமனை நாட்டின் ஐந்து பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாகும்.