
மதுரை: குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க தடையில்லா சான்றிதழ் கோரி திருநங்கை தொடர்ந்துள்ள வழக்கில் வணிக வரித் துறை செயலாளர் பதிலாளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ஸ்வப்னா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நான் திருநங்கை. பல்வேறு இடர்பாடுகளை கடந்து, பி ஏ படித்து முடித்தேன். கடந்த 2019 ல் குரூப்-I தேர்வில் வெற்றி பெற்றேன். பிஎஸ்டிஎம் ( தமிழ் வழி கல்வி) சலுகை அடிப்படையில் பணி ஒதுக்கீடு பெற்று வணிக வரித்துறையில் உதவி ஆணையராக பணிபுரிந்து வந்தேன்.