• April 30, 2025
  • NewsEditor
  • 0

உங்கள் ராசிக்கு, (வாக்கியப் பஞ்சாங்கப்படி) ஏப்ரல் 26 முதல் ராகு பகவான் 9-ம் இடத்திலும்; கேது பகவான் 3-ம் இடத்திலும் அமர்ந்து பலன் தருகிறார்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியானது, சோர்ந்துபோய் இருந்த உங்களை உற்சாகப்படுத்தும் விதமான பலன்களைத் தரும்.

ராகு பகவான் தரும் பலன்கள்

1. பல வகையிலும் எதிர்பாராத பணவரவு உண்டு. சேமிக்கத் தொடங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பல்வேறு பிரச்னைகளில் உங்களின் ஆலோசனையை மற்றவர்கள் எதிர்பார்ப்பார்கள்!

2. கிடப்பில் கிடந்த பல காரியங்களை முழு மூச்சுடன் முடித்துக் காட்டுவீர்கள். ஒளிந்து மறைந்து வாழ்ந்த வாழ்க்கை இனி பிரகாசிக்கும். குடும்பத்தினர் உங்கள் வார்த்தையை மீறி ஒன்றும் செய்யமாட்டார்கள்.

மிதுனம்

3. குழந்தை இல்லாமல் தவித்த தம்பதியர்க்குக் குழந்தைப் பாக்கியம் உண்டாகும். குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். சேமிப்பு கூடும்.

4. வி.ஐ.பிகள் துணையுடன் முக்கிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். எனினும், தந்தையாரின் ஆரோக்கியம் குறையும். சிலநேரம் அவருடன் கருத்துவேறுபாடுகள் வரும். பூர்வீகச் சொத்தை விற்று, வேறிடத்தில் இடம் வாங்குவீர்கள்.

5. மாணவர்களே! எண்ணங்கள் பூர்த்தியாகும். வியாபாரிகளுக்குப் பற்று வரவு உயரும். பழைய சரக்குகளைச் சலுகைகள் மூலம் விற்றுத் தீர்ப்பீர்கள். அரசாங்க விஷயங்களில் அதீத கவனம் தேவை.

கேது பகவான் தரும் பலன்கள்

6. கேது பகவான் 3-ம் இடத்தில் அமர்வது மிகவும் சிறப்பான நிலை ஆகும். இதுவரையிலும் அலைக்கழித்திருக்கும் நிலை மாறும். அரைகுறையாக நின்றிருந்த காரியங்களில் தடைகள் நீங்கும். பங்காளிப் பிரச்னைகள், சொத்துத் தகராறுகள் ஆகிய அனைத்தும் விலகும். குடும்பத்தில் சங்கடங்கள் தீரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும்.

7. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். சொந்த ஊரில் உங்களை மதிப்பார்கள். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.

மிதுனம்

8. வியாபாரிகளே! பழைய சரக்குகளை எளிதாக விற்பீர்கள். புதிய சரக்குகளைக் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்களே! உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். புதிய வாய்ப்புகள் வந்தமையும்.

9. விருட்சங்களின் கீழ் அருளும் பிள்ளையாரை வழிபடுவது விசேஷம். சென்னை – கூடுவாஞ்சேரியில் அமைந்துள்ள சுயம்பு மாமரத்து விநாயகரை சதுர்த்தி தினங்களில் வழிபட்டு வாருங்கள் சங்கடஹர சதுர்த்தி தினங்களில் அபிஷேகத் திரவியங்கள் வாங்கிக் கொடுத்து வழிபடுங்கள்; தடைகள் நீங்கும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *