
மதுரை: தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களையும் அகற்றக் கோரும் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மேல்முறையீடு செய்துள்ளது.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு : விடுதலை சிறுத்தைகள் கட்சி பதிவு பெற்ற அரசியல் கட்சி. எங்களுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்களும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றாக விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல்பட்டு வருகிறது.