
பஹல்காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் பலரை உள்ளூர் காஷ்மீரிகள் காப்பாற்றியுள்ளனர். இது தொடர்பான காட்சிப் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பாராட்டுகள் குவிகின்றன.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த வாரம் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இவர்களில் உள்ளூரை சேர்ந்த மட்டக் குதிரை ஓட்டியும் ஒருவர். இவரைப் போல மட்டக் குதிரை ஓட்டிகள், சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்ட உள்ளூர் காஷ்மீரிகள் பலர் சுற்றுலாப் பயணிகளை காப்பாற்றியுள்ளனர்.