
மங்களகிரி: காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ம் தேதி தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு நேற்று ஆந்திர மாநிலம், மங்களகிரியில் உள்ள ஓர் அரங்கில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்து கொண்டு பேசியதாவது: மதம் குறித்து எதுவும் பேசாத சுற்றுலா சென்ற அப்பாவி மக்கள் 26 பேரை சுட்டுக்கொன்றாலும், அந்த தீவிரவாதிகளுக்கும், அவர்களை ஊக்குவித்த பாகிஸ்தான் நாட்டுக்கும் இங்கு ஆதரவாக பேசுவது மிகவும் தவறு. ஆயினும் நாங்கள் அப்படித்தான் பேசுவோம் என்று கூறுபவர்கள் அந்த நாட்டுக்கே சென்றுவிடுங்கள்.