• April 30, 2025
  • NewsEditor
  • 0

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா, பாகிஸ்தான் இடையே உறவு மிக மோசமடைந்து வருகிறது.

இதனால், ‘இன்னொரு போர் உலகில் உண்டாகிவிடுமோ?’ என்று உலகமே அச்சத்தில் உள்ளது.

நேற்று, பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் ஒன்று நடந்தது. அதில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அத்தாவுல்லா தரார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…

பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அத்தாவுல்லா தரார்

அடுத்த 24 – 36 மணிநேரத்தில்…

“இந்தியா பாகிஸ்தான் மீது அடுத்த 24 – 36 மணிநேரத்தில் ராணுவ தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக நம்பத் தகுந்த உளவுத்துறை தகவல் வந்துள்ளது. இந்தியா எந்த நடவடிக்கை எடுத்தாலும், அதற்கு பலமான அடி திரும்பக் கொடுக்கப்படும்.

நாடு தங்களது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை தேவையான அனைத்து வழிகளிலும் பாதுகாக்கும். இந்தியா பாகிஸ்தான் மீது போரை திணிக்க முயன்றால், அதனால் ஏற்படும் பேரழிவிற்கு இந்தியா மட்டுமே பொறுப்பு.

பாகிஸ்தான் கடுமையாக…

பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்புள்ளது என்று எந்த ஆதாரத்தையும் இந்தியா வழங்கவில்லை. ஆதாரமற்ற மற்றும் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தான் இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதலை திட்டமிட்டுள்ளது.

நீதிபதியாகவும், நடுவராகவும், மரணதண்டனை நிறைவேற்றுபவராகவும் இருக்கும் இந்தியாவின் பழக்கத்தை பாகிஸ்தான் திட்டவட்டமாகவும் கடுமையாகவும் நிராகரிக்கிறது” என்று பேசியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *