
சென்னை: சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத்தலைவர் மு.அப்பாவு அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் 2025-26-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் மார்ச் 14-ம் தேதியும், வேளாண் பட்ஜெட் 15-ம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது.
மார்ச் 24-ம் தேதியிலிருந்து துறை தோறும் மானிய கோரிக்கை விவாதம் தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.