
6 வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவு கொலையும் செய்து, தனது சொந்த தாயையும் அடித்துக் கொலை செய்த தஷ்வந்த் வழக்கு தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
2017-ம் ஆண்டு சென்னையை அடுத்த போரூரில் 6 வயது சிறுமியை, பக்கத்து வீட்டில் குடியிருந்த அப்போது 23 வயதாகிருந்த தஷ்வந்த் பாலியல் வன்கொடுமை செய்து நெடுஞ்சாலையில் அந்தக் குழந்தையின் சடலத்தைத் தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த வழக்கு விசாரணையில் தஷ்வந்த் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அதிகபட்ச தண்டனையாக 46 ஆண்டுகள் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது நீதிமன்றம்.
இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தஷ்வந்த், காவல்துறை குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக, தஷ்வந்த் சிறையில் இருந்து வெளியில் வந்து, தமிழ்நாட்டை விட்டுத் தப்பி ஓட பணம் தராத தன் தாயை அடித்துக் கொலை செய்தான். மும்பையில் காவல்துறையினரிடம் சிக்கி, அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறான்.
இப்படியாக தஷ்வந்த் மீது 6 வயது சிறுமையை பாலியல் கொலை செய்த வழக்கு, தனது சொந்தத் தாயைக் கொலை செய்த வழக்கு, காவல்துறையினரிடமிருந்து தப்பி ஓடிய வழக்கு என வழக்குகள் இருந்தன.
இதில் 6 வயது சிறுமையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தஷ்வந்திற்கு 46 ஆண்டுகள் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது நீதிமன்றம்.
இந்நிலையில், தற்போது தாயைக் கொன்ற வழக்கின் தீர்ப்பு இன்று வந்துள்ளது. இந்த வழக்கின் நீதிமன்ற விசாரனையில் தந்தை பிழற்சாட்சியாக மாறியதால் போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி தஷ்வந்தை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இந்த வழக்கில் முழுப் பின்னணியைத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையை வாசிக்கலாம். தஷ்வந்த் சிக்கியது எப்படி? காவல்துறையின் ஸ்டேட்மெண்ட்