
சென்னை: கடந்த 2019 முதல் 2022-ம் ஆண்டு வரையிலான 3 நிதியாண்டுகளில், ரூ.968.11 கோடி மதிப்பிலான மிகைச் செலவினங்களுக்கான மானிய கோரிக்கைகளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார்.
சட்டப்பேரவையில் நேற்று 2019- 20, 20-21 மற்றும் 21-22-ம் ஆண்டுகளில் மிகைச் செலவுகளுக்கான மானியக் கோரிக்கைகைளை, அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து பேசியதாவது: கடந்த 2019-20, 2020-21 மற்றும் 2021-22-ம் ஆண்டுகளி்ன் நிதியொதுக்க கணக்குகளை பொதுக்கணக்குக் குழு ஆய்வு செய்ததில், சில மானியங்களின் கீழ் அனுமதிக்கப்பட்ட நிதியொதுக்கத்துக்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.