
சென்னை: அமைச்சரவையில் விடுவிக்கப்பட்ட பொன்முடி, செந்தில்பாலாஜி இருவரும் 2-வது நாளாக பேரவைக்கு வரவில்லை. தமிழக அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோர் கடந்த 27-ம் தேதி விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, சட்டப்பேரவையில் அமைச்சரவையின் முதல் வரிசையில் இருந்த பொன்முடி பெயரும், 2-வது வரிசையில் இருந்த செந்தில்பாலாஜி பெயரும் நீக்கப்பட்டு, 3-வது வரிசைக்கு மாற்றப்பட்டது. நேற்று முன்தினம் இருவரும் பேரவைக்கு வரவில்லை.