
புதுடெல்லி: கனடா பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமீபத்திய அரசியல் நகர்வுகளின் தொடர்ச்சியாக, இந்தியா – கனடா இடையிலான உறவு மீண்டும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “கனடாவின் பிரதமராக நீங்கள் (மார்க் கார்னே) தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், லிபரல் கட்சி வெற்றி பெற்றதற்கும் வாழ்த்துகள். இந்தியாவும் கனடாவும் ஜனநாயக மாண்புகள், சட்டத்தின் ஆட்சிக்கான உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் மக்கள் இடையேயான உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன. நமது கூட்டாண்மையை வலுப்படுத்தவும், நமது மக்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தவும் தங்களுடன் பணியாற்றுவதை நான் எதிர்நோக்கியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.