
புதுடெல்லி: காஜி , காஜியத், ஷரியா முதலான இஸ்லாமிய நீதிமன்றங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை. அவை பிறப்பிக்கும் உத்தரவுகள் யாரையும் கட்டுப்படுத்தாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
இஸ்லாமிய பெண் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். கணவர் பைக் உடன் ரூ.50,000 வரதட்சிணை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். எதுவும் கிடைக்காததால் காஜியாத் நீதிமன்றம் மூலம் தலாக் பெற்றுள்ளார். அதன்பின் விவகாரத்து பெற்ற பெண், ஜீவனாம்சம் கோரி குடும்ப நல நீதிமன்றத்தை நாடியுள்ளார். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பதால், தனியாக வாழ்வதற்கு மனைவியே காரணம் என கூறி ஜீவனாம்சம் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.