
5 ஸ்டார் ஹோட்டல் என்றதும் அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது நூறு ஆண்டுக்கும் மேலாக பழமையான தாஜ் ஹோட்டல் தான். அந்த அளவுக்கு இந்தியாவின் மிக முக்கியமான அடையாளமாக விளங்கும் இந்த தாஜ் ஹோட்டல் மிக பெரிய சாம்ராஜ்யத்தையே உருவாகியுள்ளது என்றால் அது மிகையல்ல. இன்முகத்துடன் வரவேற்று உபசரிப்பதில் ஈடு இணையில்லாத சேவையை வழங்கும் தாஜ் குழுமத்தை உலக தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், முக்கிய புள்ளிகள் என ஏராளமானவர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது.
உலக அளவில் பிரபலமான தாஜ் ஹோட்டலுடன் இணைந்து ஒரு பிரமாண்டமான புது முயற்சியாக கைகோர்த்துள்ளது சென்னையின் பிரபலமான ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிறுவனமான AMPA குழுமம். சென்னையின் மைய பகுதியான நெல்சன் மாணிக்கம் சாலையில், உலகிலேயே முதல் முறையாக தாஜ் பிராண்டட் குடியிருப்புகள் அமைய உள்ளது. 3.5 ஏக்கர் பரப்பளவில், 123 சொகுசு குடியிருப்புகள், 253 அறைகளுடன் சென்னையிலேயே மிக உயரமான 5 நட்சத்திர தாஜ் ஹோட்டல், 36 சொகுசு ஆபீஸ் ஸ்பேஸ், ரூப் டாப் டைனிங் சேவை என ஒரே இடத்தில் சங்கமிக்க இருக்கும் Taj Sky View Hotel & Residences கட்டுமான பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.
வெஸ்டர்ன் கல்ச்சரை இந்திய கட்டமைப்பில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக பிளானிங், கட்டுமானம், இன்டீரியர் மற்றும் கான்செப்ட் டிசைனிங் என அனைத்தும் வெளிநாட்டு கட்டிட கலைஞர்களால் வடிமைக்கப்பட்டு வருகிறது.
குடியிருப்பு பகுதியான 20 மாடி கட்டிடத்தில் முதல் 15 மாடிகளில் 3 & 4 BHK அபார்ட்மெண்ட்களும் அதற்கு மேல் உள்ள மாடிகளில் ஸ்கை வியூ வில்லாக்களை உருவாக்கி வருகிறார்கள். ஆடம்பரமான லுக்கில் 12 மாடிகள் கொண்ட ஆபீஸ் ஸ்பேஸுக்காக தனி கட்டிடமும், தாஜ் ஹோட்டலுக்கென 20 மாடிகள் கொண்ட தனி கட்டிடமும் உறுதித்தன்மையுடன் உருவாகி வருகிறது.
75000 சதுர அடியில் கிளப் ஹவுஸ், செக்யூரிட்டி சேவை, சென்ட்ரலைஸ்ட் ஏர் கண்டிஷனர், ஸ்பா, ஸ்பெக்டர் தியேட்டர் என 5 நட்சத்திர ஹோட்டலின் அனைத்து அம்சங்களும் பொருந்திய இந்த வியக்கத்தக்க ப்ராஜெக்டின்
பராமரிப்பு மற்றும் நிர்வாக பணிகளை தாஜ் ஹோட்டலே நிர்வகிக்க உள்ளது என்பது கூடுதல் சிறப்பு. நட்சத்திர ஹோட்டலில் கிடைக்க கூடிய செஃப் ஆன் கால், ஹோம் டைனிங் முதல் ஹவுஸ் கீப்பிங் வரை அனைத்து சேவைகளும் வீட்டிலேயே கிடைக்கும்.
சென்னையின் மத்திய பகுதியில் ஆடம்பரமான சொகுசு வாழ்க்கையை சாத்தியமாக்கும் இந்த கிரீன்ஃபீல்ட் திட்டம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்த தயாராகி வருகிறது.
Contact Number : +91 7450085008