• April 29, 2025
  • NewsEditor
  • 0

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில்,  நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பலர் நடித்திருக்கும் படம் `டூரிஸ்ட் ஃபேமிலி’.

இந்தப் படம் மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சிறப்பு காட்சியில் படத்தைப் பார்த்த  லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியான தமிழ் குமரன்  `டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவைப் பாராட்டி இருக்கிறார்.

தமிழ் குமரன்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “ டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்தேன். அது என்னை மிகவும் ஈர்த்தது. மனதையும் உருக்கிய ஒரு படமாக அமைந்தது. சசிகுமார், சிம்ரன் மற்றும் யோகி பாபு ஆகியோரின் நடிப்பு மிகவும் புதுமையாகவும் சிறப்பாகவும் இருந்தது. படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக நடித்துள்ளனர்.

குறிப்பாக முள்ளி தாஸ் (கமலேஷ்) என்கிற கதாபாத்திரம் பாராட்டத்தக்க வகையில் இருந்தது. முதல் திரைப்படத்திலேயே அற்புதமான கதை மற்றும் நகைச்சுவையை வழங்கிய இயக்குநர் அபிஷன், யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், இந்த அருமையான திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

மில்லியன் டாலர்ஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள “டூரிஸ்ட் ஃபேமிலி” மாபெரும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்! கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று கொண்டாட வேண்டிய படம் இது” என்று பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *