• April 29, 2025
  • NewsEditor
  • 0

நீங்க 30 வயசுலேயே ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல சம்பளம் வாங்குபவரா? வாழ்த்துகள். இது உங்க திறமைக்கும் உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரம். வாழ்க்கை சூப்பரா போயிட்டு இருக்கு இல்லையா? இப்போதான் நீங்க சில முக்கியமான முடிவுகளையும் எடுத்தாகணும்.

உங்க கிட்ட ஒரு கேள்வி – கெரியர்ல வெற்றிகரமா செயல்படுறீங்க, ஆனா இதே நிலைமை உங்களோட 40களிலும் இருக்கும்னு நினைக்கிறீங்களா? உடல்நலப் பிரச்னைகள், வேலையில் மாற்றங்கள் (ஏ.ஐ, புது தொழில்நுட்பங்களின் வரவு), குடும்பப் பொறுப்புகள், இல்லைனா பணியால் ஏற்படும் களைப்பு – இப்படி பல பிரச்னைகள் வர வாய்ப்பிருக்குன்னு யோசிச்சிருக்கீங்களா?

20-40 வயசு நாம் நம்முடைய மொத்த உழைப்பையும் தரக்கூடிய ஆண்டுகள், இதனால் நமக்கு வேலைக் களத்தில் நல்ல மவுசு இருக்கும். ஆனா 40-களில் நுழைந்த பின்னர், உங்களைவிட வேகமாகவும் துடிப்பாகவும் செயல்படும், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் (தற்போது உங்களைப்போன்ற) இளைஞர்களுக்கே நிறுவனங்கள் அதிக வாய்ப்பு தருவாங்க. அதேமாதிரி, 40-களில் இருப்பவர்களிடம், ‘காசு இருந்தாலும் நீங்க இந்த வேலையில் இருப்பீங்களா?’ன்னு கேட்டுப் பாருங்க. அவங்க பதில் ‘மாட்டேன்’ என்பதாகவே இருக்கும். பிடிச்சு வேலை செய்வதை விட, குடும்பப் பொறுப்புகளுக்காகவே பலரும் வேலைக்கு செல்றவங்களா இருப்பாங்க.

ஏன் உங்க 1 லட்ச ரூபாய் வருமானமும் போதாது?

இன்னைக்கி நீங்க ரொம்ப நிம்மதியா வாழலாம் ஆனா முதலீடுகள் இல்லாத வருமானம் என்பது பொய்யான ஒரு பாதுகாப்பையே தரும். நீங்க இன்னும் முதலீடு செய்யாம இருந்தீங்கன்னா, உங்க மொத்த வருங்காலமும் உங்களோட சம்பாத்தியத்தை மட்டுமே நம்பி இருக்கும்.

உடல்நலக் குறைவு, வேலை இழப்பு, குடும்ப நெருக்கடி போன்ற சூழ்நிலைகள் ஏற்படும்போது உங்களுடைய மொத்த சுதந்திரமும் பறிபோகும். அதனாலதான் பொதுவான 60 வயது ரிட்டையர்மென்டை விட 40-களில் ரிட்டையர் ஆக முனைவது, அசம்பாவிதங்களைத் தவிர்க்க உதவும்!

இப்போ நீங்க செய்ய வேண்டியது என்ன?

நீங்க 30-38 வயதுக்குள் ஒரு லட்சத்துக்கும் மேல சம்பளம் வாங்கி, இன்னும் முதலீடு செய்யாம இருந்தீங்கன்னா, பலரை விட ஒரு படி பின்னேதான் இருக்கீங்க. ஆனா இப்போ செயல்பட்டாலும் நீங்க நினைச்சதை அடைய முடியும்!

ஸ்டெப் 1: முதல்ல உங்க ஓய்வுக்கால வயசை முடிவு பண்ணுங்க. உதாரணத்துக்கு 45-ன்னு வெச்சுக்கலாம். 

ஸ்டெப் 2: நீங்க ஓய்வு பெற எவ்வளவு தொகை தேவைன்னு முடிவு பண்ணுங்க. பொதுவா, மியூச்சுவல் ஃபண்ட் SWP மூலம் மாதாமாதம் ஒரு லட்ச ரூபாய் எடுக்க 2.5 – 3 கோடி ரூபாய் சேர்க்க வேண்டியதா இருக்கும். 

ஸ்டெப் 3: 10-12 வருடங்கள்ல, 3 கோடி சேர்க்க, மாதம் ₹50,000 முதலீடு பண்ண வேண்டி வரும். நல்லதொரு டைவர்சிஃபைடு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுல நீங்க அந்தப் பணத்தை முதலீடு செய்யலாம். 50 ஆயிரம் அதிகமா இருந்தா உங்களால் எவ்வளவு முடியுமோ அதை முதலீடு பண்ணலாம். ஆனா அதிகமா முதலீடு பண்ணா சீக்கிரமா உங்க இலக்கை எட்ட முடியும்.

இதைப் பண்ணாம போனா என்னவாகும்? 

இப்போ நீங்க முதலீடு பண்ண ஆரம்பிக்கலைனா, 45 வயதில் உங்களைவிட இளமையான ஒரு பாஸ்கிட்ட நீங்க கைகைட்டி வேலை பார்க்க வேண்டி வரலாம். 50 வயதில் EMI கட்டிட்டு இருக்கணும். 55 வயதில் உங்க உடம்பு இடம் கொடுக்கலைனாலும், பணத்துக்காக வேலை பார்க்க வேண்டி வரும். நீங்க நினைச்ச எந்தவொரு காரியத்தையும் அப்போ செய்ய முடியாது. ஆனா உங்களுக்கு முன்னாடி முதலீடு செய்ய ஆரம்பிச்ச உங்க சகாக்களோ நிம்மதியா ஓய்வு பெற்று, தங்களுக்குப் பிடிச்ச விஷயங்கள்ல ஈடுபட்டு இருப்பாங்க.

ஒரு உண்மையை நீங்க புரிஞ்சுக்கணும், விரைவா ஓய்வு பெற நீங்க பெரிய பணக்காரரா இருக்கனும்னு அவசியம் இல்ல. நேரத்தையும் பணத்தையும் மதிக்கும் ஒருவராக நீங்க இருந்தாலே போதும். அதிக வருமானம் + முதலீடு செய்யாமல் இருப்பது என்பது வாய்ப்பிருந்தும் கோட்டை விடுவது! இப்பவே ஆரம்பிங்க, இல்லைனா பிற்காலத்துல வருத்தப்படுவீங்க!

சரி, அடுத்து என்ன?

நீங்க முதலீடு பண்ண தயார் ஆகிட்டீங்க. ஆனா எங்கிருந்து ஆரம்பிக்கணும்னு தெரியலையா? விகடன் ‘லாபம்’ உங்களுக்கு உதவ காத்திருக்கு. தமிழர்கள் அனைவரும் முதலீட்டில் சிறந்து விளங்கணும் என்பது ‘லாபம்’ நிறுவனத்தின் நோக்கம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் நீங்க சுலபமாக நிதி சுதந்திரம் அடைய நாங்க உங்களுக்கு உதவுறோம்.

நீங்க மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யத் தயாரா? உங்களுக்கு சரியான வழிகாட்டல் வேணுமா? உங்களுக்காக 15 நிமிடங்கள் போன் கால் வழிகாட்டல் தர லாபம் தயாராக இருக்கு. இந்த வழிகாட்டலுக்கு நீங்க எந்தவிதக் கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்தக் காலில் உங்களுக்கு கிடைக்கும் அனுகூலங்கள்:

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் குறித்த தெளிவு

உங்களுக்கான பிரத்தியேக முதலீட்டு திட்டம்

உங்களுடைய சந்தேகங்களுக்கான பதில்

ஏப்ரல் மாதத்தில் 25 நபர்களுக்கு மட்டுமே இதில் அனுமதி உண்டு.

முன்பதிவு செய்ய, இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்: https://forms.gle/avyr82Dw7hYycZ6SA

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *