
கடந்த இரண்டு நாள்களாக சமூக வலைத்தளங்களில் விருந்துடன் இலையில் மதுபாட்டிலும் வைத்து விருந்து நடந்த காணொலி வைரலாகி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.
இந்தச் சம்பவம் கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் தி.மு.க இளைஞரணி கூட்டத்தில் நடந்ததாக அ.தி.மு.க-வினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி!
பெண்கள் பாதுகாப்பின்மைக்கு அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி! போதைப் பொருள் கடத்தலுக்கு திமுக அயலக அணியே சாட்சி! போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் திமுக இளைஞரணி கூட்டமே சாட்சி!
ஸ்டாலின் மாடல் சமூக (அ) நீதிக்கு வேங்கைவயலே சாட்சி! Already ஆப்ரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0 அனைத்துமே Failure.
கள்ளச்சாராய ஆட்சிக்கு!
கள்ளக்குறிச்சியே சாட்சி!சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி!
பெண்கள் பாதுகாப்பின்மைக்கு
அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி!போதைப் பொருள் கடத்தலுக்கு
திமுக அயலக அணியே சாட்சி!போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் திமுக இளைஞரணி…
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) April 29, 2025
இதில் இன்று Version 2.0 Loading ஆம்!
அதிமுக ஆட்சியில் தலை நிமிர்ந்து இருந்த தமிழ்நாட்டை, ஜாமினில் வந்தவர்க்கெல்லாம் தியாகி பட்டம் கொடுத்து தலைகுனிய வைத்ததற்குப் பொம்மை முதலமைச்சரே சாட்சி!
2026-ல் ஒரே version தான் – அது அதிமுக version தான்! மக்கள் வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெரிய ‘ஓ’ (0) வாக போட்டு ‘ByeByeStalin…’ என்று சொல்லும்போது தாங்கள் சட்டையைக் கிழித்துக்கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி.” என்று விமர்சித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs