• April 29, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

மதுரா என்ற பெயர் மட்டுமே தெரியும். நான் அந்த ஊரின் காலடி எடுத்து வைக்கும் வரை. சிறு வயதில் கிருஷ்ணர் பிறந்து வளர்ந்த கதைகளில் வரும் ஊரின் பெயர்களை மட்டும் கேள்விப்பட்ட நான் ஒரு நவம்பர் மாதம் நேரிலேயே கண்டு மகிழ்ந்த அனுபவம் இது.

2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நான்காம் தேதி கிளம்பி முதலில் கோகுலம் சென்றோம்.

உத்திரப்பிரதேசத்தில் உள்ள மதுராவுக்கு 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோகுலம்.

கிருஷ்ணர் வளர்ந்த இடம் என்பதால் கிருஷ்ண பக்தி கொண்ட மக்களைப் பார்க்கும் பொழுது இன்னும் இவரின் கதைகளை கேட்க ஆவல் வருகிறது.

மதுரா

ஆட்டோ நுழைய முடியாத சந்து பொந்தில் நடந்து பலராம், கிருஷ்ணர் கோயிலை தரிசித்து விட்டு நடந்தால் கொஞ்சம் தொலைவிலேயே யமுனை நதிக்கரையை ரசிக்கலாம். இதனுடன் எங்கள் படகு சவாரியும் நன்றாக நிறைவடைந்தது.

இன்னும் சிறிது தூரப் பயணத்தில் ரமன் ரெட்டி (ராமன் Reti)ஆசிரமம் வருகிறது.

இங்கு கிருஷ்ண ப்ரியர் (யா)க்களை ரசிக்கலாம். தலை மேல் கைகுவித்து, கைதட்டி, மகிழ்ச்சியில் திளைத்து, தனை மறந்து நடனமாடி… ஆஹா! என்ன கொண்டாட்டம்.

சுவர்களில் ஓவியங்கள், தங்கும் அறைகள் எல்லாம் ரிஷி தங்கி இருக்கும் குடிகள் போல வடிவமைத்து இருந்தனர்.

அதைச் சுற்றி வந்தால் மண்ணில் புரண்டு கொண்டிருக்கும் சிலர், கழுத்து வரை மண்ணில் புதைந்து கொண்டு சிலர், சுற்றுலா வந்த பள்ளி குழந்தைகளின் ஆர்ப்பாட்டம், மணல்களை அள்ளி உடம்பில் பூசி கொண்ட சிலர் என பலரைக் கண்டு ஏதும் புரியாமல் ஒரு புது அனுபவத்தை தந்தது இந்த மதுரா சுற்றுலா.

மதுரா
மதுரா

புரியாமல் இதனைக் கண்டபோது தான் தெரிந்தது- அது குழந்தை கிருஷ்ணர் விளையாடிய இடம், கிருஷ்ணரின் காலடிபட்ட மண் அதுவென்று.

எங்கள் ஓட்டுனரின் அறிவுரைப்படி கொஞ்சம் மணல் எடுத்து கவரிலிட்டுக் கொண்டு அங்கிருந்து சின்தாகரன் கோவிலை வந்தடைந்தோம்.

இந்த இடத்தில் தான் மண்ணை உண்ட கிருஷ்ணன் வாயில் உலகத்தை யசோதா கண்டதாகவும், அவரின் கவலையை சிவபெருமான் நீக்கியதாகவும் வரலாறு உண்டு.

இப்பொழுது மதுராவின் ஜன்ம பூமியை காண கிளம்பிவிட்டோம். இங்கு அலைபேசி, புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.

கிருஷ்ணன் பிறந்த அந்த சிறைச்சாலையின் அமைதி என்னவென்று சொல்ல இயலாத ஒரு பரவசத்தை அளித்தது.

அலைபேசி அனுமதி இல்லாததாலோ என்னவோ அந்த அமைதியை பறவைகளும் கொண்டாடியது. பனிக்காலம் என்பதாலும்,

மதிய நேரம் கடந்து, மாலை தொடங்கியதாலும், அந்தப் பருவ நிலையில் அண்ணாந்து பார்த்தால் கண்கள் பறவை கூட்டத்தை புகைப்படம் எடுத்து மனதிற்குள் சேமித்து வைத்தது.

மதுரா
மதுரா

மாலை வேளையில் ரங் ஜி(Rang ji)கோயில் சென்றோம். இதன் சிறப்பு ஸ்ரீரங்கம் மற்றும் ஸ்ரீ ரங்கநாதர் போன்ற கோபுரங்களும், சாமி சிலையும் நமது தென்னிந்திய பாணியில் அமைந்து இருந்ததுதான். புள்ளி வைத்த கோலங்கள் நமது ஊரை நினைவுப்படுத்தியது.

அடுத்துச் சென்ற கோவில் ஸ்ரீ பாங்கே பிகாரி(sri Banke Bikari). சலவைக்கல் தூண்கள் வளைந்தும், நெளிந்தும் புதுவித தோற்றத்திலிருந்தது.

குரங்குகளின் தொல்லைகளை சிறப்பாக சமாளித்து பிரேம் மந்திர்கு வந்தோம். இது புராண கோவில் அல்ல. ஆனாலும் வண்ண விளக்குகளின் கண்காட்சியாக மாலை வேலைகளில் இதை கண்டு களிக்க சுற்றுலா மக்கள் சாரை சாரையாக வருகின்றனர்.

இதனை ரசிக்க கண்டிப்பாக இரு கண்கள் போதாது. இதற்குள் ஒருநாள் முடிந்து விட்டது.

மதுராவை சுற்றிப் பார்க்க ஒரு நாள் போதாது. ஆனாலும் விரைவிலேயே சுற்றுலாவை முடித்துக்கொண்டு மறுநாள் ஆக்ரா செல்ல இருந்ததால் காலையில் கிளம்பி ராதை பிறந்து வளர்ந்த பார்சானா கிராமம், ஆட்டோவிலேயே கோவர்த்தன மலை கிரிவலம், படகுசவாரியில் யமுனா ஆரத்தி பார்த்துவிட்டு ஆக்ரா நோக்கி கிளம்பி விட்டோம்.

பிரேம் மந்திர் (அன்பு கோயில்) விளக்குகள் செயற்கை எனில்,யமுனை நதிக்கரைகளில் படகுகளில் அமர்ந்து கொண்டு கம்சன் கோட்டையை கண்டு களித்து, பின் மாலை நேரத்தில் நதிக்கரையில் நடந்த ஆரத்தியை இயற்கைச் சூழலில் காண்பது சுகம், பரவசம்.

My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா’ கட்டுரை

டூர்

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.

இந்த மாதத்திற்கான தலைப்பு – `சுற்றுலா’. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.

வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.   

பரிசுத்தொகை விவரம்:

  • முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)

  • இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)

  • நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)

நினைவில் கொள்க: 

  • நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025

  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

  • உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

  • உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. 

  • கட்டுரையின் தரத்தின்  அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *