
சென்னை: பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமார், பத்மஸ்ரீ விருது பெற்ற கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஆகியோருக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசின் சார்பில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷன் விருதை கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக, குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்.