
மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்வதன் மூலம் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கான தொகுதிகளின் விகிதாச்சார எண்ணிக்கையை மத்திய அரசு குறைக்கப் பார்ப்பதாக குமுறுகிறார் முதல்வர் ஸ்டாலின். இதைத் தடுப்பதற்காக மாநில முதல்வர்களை ஒருங்கிணைத்து முதல்கட்ட ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தி இருக்கிறார்.
இந்த நிலையில், ஏற்கெனவே தொகுதி மறு சீரமைப்பின் போது காணாமல் செய்யப்பட்ட புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி மீண்டும் உருவாக்கப்படுமா என்ற கேள்வி புதுக்கோட்டை மாவட்ட மக்கள் மத்தியில் தற்போது மேலோங்கி வருகிறது. மன்னர்கள் அரண்மனை கட்டி ஆட்சி செய்த இடம் என்ற வரலாற்றுப் பாரம்பரியம் புதுக்கோட்டைக்கு உண்டு.