
புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஆத்திரமூட்டும் மற்றும் வகுப்புவாத உள்ளடக்கத்தை பரப்பியதற்காக மொத்தம் 6.3 கோடி சந்தாதாரர்களை கொண்ட 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளின் பேரில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. டான், சமா டிவி, ஏஆர்ஒய் நியூஸ், போல் நியூஸ், ரஃப்தார், ஜியோ நியூஸ், சுனோ நியூஸ் உள்ளிட்ட செய்தி சேனல்களுக்கும் பத்திரிகையாளர்கள் இர்ஷாத் பாட்டி, அஸ்மா ஷிராசி, உமர் சீமா, முனீப் ஃபரூக் ஆகியோரின் யூடியூப் சேனல்களும் தடை செய்யப்பட்டுள்ளன.