
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி ஜெய்ப்பூரில் நடந்திருந்தது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் 14 வயதே ஆன சிறுவரான வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் அடித்திருந்தார்
அவருக்குதான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
ஆட்டநாயகன் விருதை வாங்கிவிட்டு வைபவ் பேசுகையில், ‘ரொம்பவே மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஐ.பி.எல் இல் என்னுடைய முதல் சதம் இதுதான். அதுவும் என்னுடைய மூன்றாவது இன்னிங்ஸிலேயே வந்திருக்கிறது. நான் கடுமையாக எடுத்துக்கொண்ட பயிற்சிகளின் வெளிப்பாடுதான் இந்த இன்னிங்ஸ். ஜெய்ஸ்வாலுடன் பேட்டிங் ஆடியதும் நல்ல அனுபவமாக இருந்தது.

அவர்தான் எனக்கு நேர்மறை எண்ணங்களை ஊட்டி ஆட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார். ஐ.பி.எல் இல் சதமடிக்க வேண்டும் என்பது கனவு. அது இன்றைக்கு நிறைவேறிவிட்டது. எனக்கு எந்த பயமும் இல்லை. என்னுடைய ஆட்டத்தின் மீது மட்டுமே முழுகவனத்தையும் கொடுத்து ஆடுகிறேன்.’ என்றார்.