• April 28, 2025
  • NewsEditor
  • 0

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது மத்திய அரசு. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகளை கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது மத்திய அரசு.

பல துறைகளிலும் சிறந்து விளங்கிய 113 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழகத்திலிருந்து 19 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் அஜித்துக்கும், கிரிக்கெட்டர் அஷ்வினுக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஷ்வின், நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா உள்ளிட்டவர்களுக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவால் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் பத்ம பூஷண் விருதுகள் பெறுபவர்கள்

கலைத்துறையில் நடிகர்கள் அஜித்குமார், ஷோபனா இருவருக்கும் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

விளையாட்டுத்துறையில் ரவிசந்திரன் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

கலைத்துறை

மதுரையைச் சேர்ந்த பறையிசை கலைஞர் வேலு ஆசான்.

புதுச்சேரியைச் சேர்ந்த தவில் வித்வான் கலைஞன் தட்சணாமூர்த்தி.

தாள வாத்திய கலைஞர் குருவாயூர் துரை

கும்பகோணம் சிற்பி ராதாகிருஷ்ணன் தேவ சேனாதிபதி

ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. கடந்தாண்டு நடைபெற்ற ஜி-20 மாநாட்டிற்கு 27 அடி உயரம், 21 அடி அகலம், 21 டன் எடை கொண்ட அஷ்டதாகு லோக நடராஜர் சிலை வடிவமைத்தவர் தேவ சேனாதிபதி. 

இலக்கியத் துறை

சுதந்திரப் போராட்ட வீரர், தத்துவவாதி மற்றும் பத்திரிகையாளருமான தினமலர் நிறுவனர் ராமசுப்பையர்.

தெருக்கூத்து கலைஞர் பி.கே.சம்பந்தன்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதி ஆய்வில் ஈடுபட்டுவருபவர் சீனி. விசுவநாதன்.

வர்த்தகம் தொழில்துறையில் ஆர்.ஜி.சந்திரமோகன், பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு, அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் எம்.டி.சீனிவாஸ் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *