
புதுடெல்லி: பாகிஸ்தானுடன் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் உள்ள மோடி பதுங்கு குழிகளை அப்பகுதி மக்கள் தயார் செய்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, காஷ்மீர் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் நிலத்தடி பதுங்கு குழிகளை தயார் செய்து வருகின்றனர்.