
அடுத்ததாக புதுமுகங்கள் நடிக்க, காதல் பின்னணியில் படம் ஒன்றை இயக்க மணிரத்னம் முடிவு செய்திருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன்.
‘தக் லைஃப்’ முடித்துவிட்டு அடுத்ததாக காதல் பின்னணியில் முழுக்க புதுமுகங்களை வைத்து படமொன்றை இயக்க மணிரத்னம் முடிவு செய்திருக்கிறார். இதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதன் கதை இறுதியாகிவிட்டாலும், திரைக்கதையில் சில மாற்றங்களை மட்டும் செய்து வருகிறார் மணிரத்னம்.