
சென்னை: ஆளுநருக்கு எதிரான வழக்கில் கிடைத்திருக்கும் தீர்ப்பு என்பது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தால் மாநிலங்களுக்கு பெற்றுத்தந்திருக்க கூடிய மாபெரும் விடுதலை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்த நிலையில் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹ்தகி, அபிஷேக் சிங்வி, ராகேஷ் திவேதி, பி.வில்சன் ஆகியோர் வழக்காடி வெற்றியை பெற்றுத் தந்தனர். இவர்களுக்கான பாராட்டு விழா சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது.