
சிம்புவுக்கு நாயகியாக கயாடு லோஹர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
‘தக் லைஃப்’ படத்துக்குப் பிறகு, ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் சிம்பு. இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதில் சிம்புவுக்கு நாயகியாக நடிக்க கயாடு லோஹர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.