
திண்டுக்கல்: சரித்திரத்தில் இருந்து ஒரு பாடத்தை கூட கற்றுக்கொள்ளாத நாடு பாகிஸ்தான். பாகிஸ்தானுக்கு மிகச்சரியான பாடத்தை இந்தியா கொடுக்கும், என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அபிராமியம்மன் பக்தர்கள் குழு சார்பில் ஆன்மீக கருத்தரங்கு இன்று மாலை நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தீவிர தாக்குதலில் மக்கள் உயிரிழந்த பிறகும் பாகிஸ்தான் மீது இந்தியா படைஎடுக்ககூடாது என்று கூறும் திருமாவளவன், தனது வாக்கு வங்கி பலப்படும் என நினைத்து கூறுகிறார். காலம் எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்காது. இதே உச்சநீதிமன்றம் தான் சொல்லியிருக்கிறது கேரள ஆளுநருக்கு துணைவேந்தர்களை நியமிக்க பரிபூரண அதிகாரம் உள்ளது என. இரண்டு தீர்ப்புகள் குறித்தும் சட்ட வல்லுனர்களை கொண்டு பார்க்கவேண்டும்.