• April 27, 2025
  • NewsEditor
  • 0

மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், தனது ஐபிஎல் கேரியரில் 4000 ரன்கள் எடுத்து சாதனைப் படைத்துள்ளார்.

இன்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 28 பந்துகளில் 54 ரன்கள் விளாசியதன் மூலம் இந்த மைல் கல் ரன்களை எட்டியுள்ளார்.

SKY

இது மிகப் பெரிய ரன் சேர்ப்பு மட்டுமல்ல, சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் வரலாற்றில் விரைவாக 4000 ரன்கள் சேர்த்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

முன்னதாக கே.எல்.ராகுல் 2820 பந்துகளில் 4000 ரன்களை எட்டி இந்த சாதனைக்கு சொந்தக்காரராகத் திகழ்ந்தார். இதனை 2714 பந்துகளில் அடைந்துள்ளார் சூர்யா.

அனைத்து வீரர்களையும் உள்ளடக்கினால், இந்த சாதனைப் பட்டியலில் 3வது இடத்தைப் பிடிக்கிறார் சூர்யகுமார் யாதவ். முதல் இடத்தில் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ல் உள்ளனர். இருவரும் 2658 பந்துகளில் 4000 ரன்கள் சேர்த்துள்ளனர்.

Surya kumar Yadhav
Surya kumar Yadhav

இன்றைய போட்டியில் ரவி பிஷ்னோய்க்கு எதிராக 6 அடித்ததன் மூலம் தனது 150வது சிக்ஸரை நிறைவு செய்துள்ளார் சூர்யா.

4 ஃபோர்கள் 4 சிக்சர்களுடன் 54 ரன்கள் அடித்த சூர்யகுமார் யாதவ், ஆவேஷ் கான் வீசிய 18வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் அடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். ட்ரென்ட் போல்ட் 3 மற்றும் வில் ஜாக்ஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

20வது ஓவரில் 161 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது எல்.எஸ்.ஜி அணி. இது மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து பெறும் 5வது விக்கெட் ஆகும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *