• April 27, 2025
  • NewsEditor
  • 0

இந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ள 21 வயது இஞ்சினியரிங் மாணவருக்கு மன நல பிரச்னைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. குஜராத்தைச் சேர்ந்த அந்த மாணவரின் பெயர் ஜிக்னேஷ்சிங் பர்மர்.

g mail

காவலர்கள் கூறுவதன்படி ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜிக்னேஷ்சிங் பர்மர், கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுக்கு மெயிலை அனுப்பியுள்ளார்.

மத்திய காவல் துணை ஆணையர் எம். ஹர்ஷ வர்தன் கூறியதன்படி, “பர்மர் ஒரு இஞ்சினியரிங் மாணவர். அவருக்கு மன நல பிரச்னைகள் இருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Delhi Police
Delhi Police

கம்பீருக்கு அனுப்பப்பட்ட மெயிலில் “நான் உன்னைக் கொல்வேன் ( I will kill You )” என்று எழுதியதுடன், தன்னை “ISIS Kashmir” என அடையாளப்படுத்தியுள்ளார்.

துணை காவல் ஆணையர், “கம்பீருக்கு ஏற்கெனவே காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வெளியில் பேச முடியாது” எனக் கூறியுள்ளார்.

கம்பீருக்கு கொலை மிரட்டல்கள் வருவது இது முதன்முறை அல்ல, ஏற்கெனவே 2022-ம் ஆண்டு இதேப் போன்ற மிரட்டல்கள் வந்தபோது காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *